 விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உடலை தான் கனவிலும் காணவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் உடலை தான் கனவிலும் காணவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையின் அமைந்துள்ள ஒன்றிணைந்த எதிர்கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பிரபாகரன் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது, அவரது சடலத்தை நீங்கள் பார்த்தீர்களா என கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ச பிரபாகரனின் சடலத்தை பார்க்கும் மனோநிலையில் அப்போது தாம் இருக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், தாம் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் செய்யவில்லையென்றும், தீவிரவாதத்திற்கு எதிராகவே யுத்தம் செய்ததாகவும் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
 
                        

 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            