தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி புருசல் மாநகரிலிருந்து யெனீவாவரை ஈருருளிப் பயணம்..

487 0

தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி கடந்த 18ம் திகதி அன்று புருசல் மாநகரிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப் பயணம் 23.02.2019 சனிக்கிழமை பிற்பகல் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரை வந்தடைந்தது.

18ம் திகதி அன்று புருசல் மாநகரிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப் பயணம் புருசல் ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மனித உரிமை ஆணையகம், ஐரோப்பிய ஆலோசனை சபை ஆகிய மன்றுகளில் மனுக்களைக் கையளித்து தொடரப்பட்ட ஈருருளிப் பயணம், அர்லோன் மாநகரம், லக்சம்பூர்க், யேர்மன் நாட்டிலுள்ள டிலிங்கன், சார்லன்ட் நகரங்களினூடாக பயணித்து 23.02.2019 அன்று பிரான்சின் சார்யூனியன் பால்ஸ்பூர்க் நகரங்களைத் தாண்டி பி. பகல் 5 மணியளவில் பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரை வந்தடைந்தது.



ஈருருளிப் பயணத்தை மேற்கொண்ட இளையோருக்கு ஸ்ராஸ்பூர்க் நகரமக்கள் உற்சாகமாக கைகளைத்தட்டி, மலர்ச் செண்டு கொடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து ஞாயிறு, திங்கள் கிழமைகளில் பிரான்சினூடாகப் பயணித்து திங்கட்கிழமை பி.பகல் 5மணியளவில் சுவிஸ் பாசல் நகரை சென்றடையவுள்ளது.

அதே நேரம் ஒவ்வொரு நாட்டின் மாநகரங்களிலும் அந் நகர முதல்வர்களைச் சந்தித்து மனுக் கொடுத்து ஈருருளிப் பயணத்தை மேற்கொண்டுவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

17வது தடவையாக மேற்கொள்ளப்படுகின்ற மனிதநேய ஈருருளிப் பயணமானது எதிர்வரும் மார்ச் மாதம் 4ம் திகதி சுவிஸ் நாட்டின் யெனீவா நகரின் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நிறைவுக்கு வரும்.