
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஸ் மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஸ் மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
சென்னை விமானநிலையத்திலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற போது சிறுநல்லூர் என்ற இடத்தில் காரின் டயர் வெடித்ததால், நிலை தடுமாறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பேருந்து மீது பயங்கரமாக மோதியதாக கூறப்ப்படுகிறது. விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

