மத்தலவுக்கு பதிலாக கட்டுநாயக்கவை விஸ்தரித்திருந்தால் அரசாங்கம் பயனடைந்திருக்கும் – சம்பிக்க

224 0

மத்தல விமான நிலைய நிர்மாணிப்பிற்கு செலவிடப்பட்ட நிதியை கட்டுநாயக்க விமான நிலையத்தை விஸ்தரிப்பதற்கு பயன்படுத்தியிருந்தால் இலங்கையில் சுற்றுலாத்துறை மூலமான வருமானம் அதிகரிக்கப்பட்டிருக்கும் என பாரிய நகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக் ரணவக்க தெரிவித்தார்.
மத்தல விமான நிலையத்தினால் தற்போது ஒரு பயனும் அரசாங்கத்திற்கு இல்லை. அப்போதைய அரசியல்வாதிகள் எந்த அமைச்சில் இருந்தாலும் தாம் சார்ந்த பிரதேசங்களில் மாத்திரமே அபிவிருத்திகளை முன்னெடுத்தனர்.
ஜனாதிபதியும் அவ்வாறே செயற்பட்டார்.ஆனால் இது நியாயமான விடயமல்ல.தற்போது கட்டுநாயக்கவில் நாளொன்றுக்கு 225 தொடக்கம் 240 வரையிலான விமானங்கள் வருகின்றன.

மத்தல விமான நிலையத்திற்கு விமானங்கள் வருவதில்லை. 2018 ஆம் ஆண்டு வருடத்திற்கான மொத்த வருமானம் 14 மில்லியன்கள் மாத்திரமாகும். ஆனால் செலவு 5600 மில்லியனாகும். ஒரு ரூபா வருமானத்திற்கு 395 ரூபா செலவாகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தை விஸ்தரித்திருந்தால் வருடத்திற்கு 10 இலட்சத்துக்கும் அதிகமானோர் வருகை தந்திருப்பார்கள். செலவான முதலை 6 வருடங்களுக்குள் பெற்றிருக்க முடியும் என்றார்.

களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.