போயா தினத்தில் மான்களை சட்டவிரோதமாக வேட்டையாடிவர்கள் கைது

218 0

போயா தினங்களில் மான்களை சுட்டு இறைச்சியாக்கி வழமையான பிரபல ஹோட்டல்களுக்கு விற்பனை செய்யும் மூவர் அடங்கிய குழுவினரை ஹல்துமுள்ளை வனஜீவி திணைக்கள அதிகாரிகள் இன்று காலையில் கைது செய்துள்ளனர்.

மேற்படி வனஜீவி திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து திணைக்கள சுற்றி வலைப்பு குழுவினர் ஹல்துமுள்ளைப் பகுதியின் “வேலிய” என்ற இடத்திற்கு விரைந்து குறிப்பிட்ட இடத்தை சுற்றிவலைத்து,முன்னூறு கிலோ எடையுடனபன மான் இறைச்சிகளுடன் மூவரைக் கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட இறைச்சி வகைகளையும்,இறைச்சி பரிசீலனை செய்யப்படுவதையும்,மூவர் கைது செய்யப்பட்டு திணைக்கள வாகனத்தில் ஏற்றிச் செல்வதையும் படங்களில் காணலாம்.

கைது செய்யப்பட்டவர்கள் பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிபதி முன்னிலையில் இன்று ஆஜர் செய்யப்பட்டதும் நீதிபதி எதிர்வரும் 22ந் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மூவரிடமிருந்த துப்பாக்கிகள் வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை அறிந்து அவைகளை மீட்க சுற்றி வலைப்பு தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இம் மூவரும்,மான்,மறைகளை வேட்டையாடிய இறைச்சி வகைகளை போய தினங்களில் பிரபல உல்லாச விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு விற்பனை செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ள இவர்கள் இதுவே தமது தொழில் என்று பொலிஸாரின் ஆரம்க்கட்ட விசரணைகளில் தெரிவித்துள்ளனர்.