கூட்டணி முடிவு 48 மணி நேரத்தில் வெளியாகும்- அமைச்சர் ஜெயக்குமார்

243 0

பாராளுமன்ற தேர்தலுக்கான கவுண்டவுன் தொடங்கியது என்றும் 48 மணி நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் டாக்டர் உ.வே.சா.வின் 165-வது பிறந்த நாளையொட்டி சென்னை மாநில கல்லூரியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின், மா.பா.பாண்டியராஜன் உள்ளிட்டவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலுக்கான கவுண்டவுன் தொடங்கியது. 48 மணி நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும்.

கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை வெளிப்படையாக எப்படி கூற முடியும். கூட்டணி விவகாரத்தில் அ.தி.மு.க. தெளிவாக உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையில் தாமதம் எதுவும் இல்லை.

கூட்டணி வி‌ஷயத்தில் அ.தி.மு.க. விரைவு ரெயில் வேகத்தில் செல்கிறது. தி.மு.க. சரக்கு ரெயில் வேகத்தில் செல்கிறது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அரசு ஏற்கனவே எடுத்த முடிவு சரியானது. அரசாணை வெளியிட்டது கொள்கை முடிவுதான். ஆலை எந்த காரணத்தை கொண்டும் மீண்டும் செயல்படாது.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று உளறி வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.