இந்தியா செல்ல முற்பட்டவர் விமான நிலையத்தில் பலி!

218 0

இந்தியா நோக்கி பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று (18) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதடன் 52 வயதுடைய ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இன்று அதிகாலை 2 மணியளவில் இந்திய நோக்கி பயணிப்பதற்காக குறித்த நபர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது திடீரென சுகவீனமுற்ற குறித்த நபர் அருகில் இருந்த கம்பம் ஒன்றை பிடித்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் இந்திய தூதரகத்திற்கு அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.