மக்களுக்கு சிறந்த வரவு செலவுத் திட்டமாக இருந்தால் ஆதரவு!

197 0

மக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார். 

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

மக்களை நசுக்கி பிழிந்தெடுக்கும் அல்லது மக்களுக்கு பாதிக்கு ஏற்படும் விடயங்கள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடங்கியிருந்தால் அதற்கு ஆதரவளிப்பதில்லை என்று அவர் கூறியுள்ளார். 

சிறந்த வரவு செலவுத் திட்டம் ஒன்று முன் வைக்கப்படுமாக இருந்தால் பாராளுமன்றத்தில் உள்ள 225 பேரும் ஆதரவு வழங்குவார்கள் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.