ஹங்கேரி நாட்டில் 4 குழந்தைகள் பெற்றால் வருமான வரி செலுத்த தேவையில்லை!

1 0

ஹங்கேரியில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெறும் பெண்களுக்கு, வருமான வரி செலுத்துவதில் இருந்து வாழ்நாள் முழுவதும் விலக்கு அளிக்கப்படும் என்று பிரதமர் விக்டர் ஆர்பன் அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மக்கள் தொகை எண்ணிக்கை பெரும் பின்னடைவை சந்திக்கிறது. அங்கு ஆண்டுக்கு 32,000 என்ற அளவுக்கு மக்கள்தொகையில் வீழ்ச்சி ஏற்படுகிறது.

இதனால் நாட்டில் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்கும் வகையில் பிரதமர் விக்டர் ஆர்பன் தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி திட்டங்களை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெறும் பெண்களுக்கு, வருமானவரி செலுத்துவதில் இருந்து வாழ்நாள் முழுவதும் விலக்கு அளிக்கப்படுவதாக பிரதமர் விக்டர் ஆர்பன் அறிவித்தார்.

மேலும், நாட்டில் சரிந்துவரும் மக்கள்தொகையை சீர்செய்யும் விதமாக, இளம் தம்பதியருக்கு 36 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வட்டி இல்லா கடனாக வழங்கப்படும் என்றும் அந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் பிறந்த பிறகு கடன் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

Related Post

யெமன் இராணுவ முகாம் மீது தாக்குதல் – 20 பேர் பலி

Posted by - December 11, 2016 0
யெமன் நாட்டின் ஏடனில் உள்ள சர்வதேச விமான நிலையம் இருக்கும் நகரத்தின் அருகில் உள்ளது அல்-சவ்லாபனில் இராணுவ முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் வேதனம் வாங்குவதற்காக இராணுப…

மெக்சிகோவில் மேயரை சுட்டு கொன்ற போதை மருந்து கும்பல்

Posted by - July 26, 2016 0
மெக்சிகோ நாட்டில் போதை மருந்து கும்பல் பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. நவீன ஆயுதங்களுடன் அவர்கள் தனி படையையே வைத்து உள்ளனர்.அவர்களை ஒடுக்க முடியாமல் அந்த நாட்டு…

பயங்கர சூறாவளி காற்றுடன் அமெரிக்காவை புரட்டி போட்ட புயல்- 13 பேர் பலி

Posted by - October 11, 2018 0
அமெரிக்காவை புரட்டி போட்ட மைக்கேல் புயலில் சிக்கி இதுவரை 13 பேர் இறந்துள்ளதாகவும் புயலால் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அரசு கூறி உள்ளது.

லண்டன் டவர் தீ விபத்து: பழுதான குளிர்சாதன பெட்டிதான் காரணம்

Posted by - June 24, 2017 0
79 பேரை பலிகொண்ட லண்டன் கிரென்ஃபெல் டவர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக்கு அக்கட்டிடத்தில் இருந்த பழுதான குளிர்சாதன பெட்டிதான் காரணம் என ஸ்காட்லாந்து யார்டு…

Leave a comment

Your email address will not be published.