மது போதையில் சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்திய குற்றசாட்டில் சாரதி ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜப்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பிரிவுக்குட்பட்ட பகுதியில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாது மதுபோதையில் வாகனத்தினை செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் 30 வயது மதிக்கத்தக்க நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
இந்நிலையில், சாரதி அனுமதிப்பத்திரமின்றி, மதுபோதையில் வாகனம் செலுத்தினார் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் வழங்குப் பதிவு செய்த பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.
வழக்கினை விசாரித்த நீதிவான், குறித்த நபரை 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை, மதுபோதையில் சாரதி அனுமதி இன்றி மோட்டார் சைக்கிளினை செலுத்திச் சென்ற குற்றச்சாட்டில் இரு இளைஞர்களுக்கு எதிராக கோப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இரு இளைஞர்களையும் 50 மணித்தியாலங்கள் சமுதாய சீர்திருத்த பணியில் ஈடுபடுத்தி அறிக்கை சமர்பிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.


