வெடி பொருட்களும் அவற்றினை தொலைவிலிருந்து இயக்கும் சாதனங்களும் மீட்பு!

7030 45

திருகோணமலை எரக்கண்டி பிரதேசத்திலிருந்து வெடி பொருட்கள் சிலவும் அவற்றினை தொலைவிலிருந்து இயக்கக் கூடிய சாதனங்களும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்றையதினம் கிழக்கு கடற்படையினர் மற்றும் திருகோணமலை காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது அவை மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவற்றில் நான்கு வகையான வெடி பொருட்கள் காணப்படுவதாகவும் அவை மேலதிக பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக திருகோணமலை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் புல்மோட்டை கொக்கிளாய் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதும் இவ்வாறான வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment