பொய் சொன்னார் பிரதி காவல்துறை அதிபர்:அவருக்கெதிராக முறைப்பாடு!

17364 18

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் தகவல் வழங்கிய கோணாவில் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் திரிபுபடுத்திய செய்தியை வெளியிட்ட வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக பொலீஸ் முறைப்பாட்டு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


இலங்கை ஜனாதிபதி போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் வழங்கிய கருத்தையடுத்து குறித்த கோணாவில் மாணவன் தனது கிராமத்தில் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் தகவல் வழங்கியிருந்தான்.


இந்நிலையில் அம்மாணவன் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் தாக்கப்பபட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இதனிடையே அண்மையில் காங்கேசன்துறையிலுள்ள தனது அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்திருந்த  வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொசான் குறித்த மாணவன் தவறாக வீதியில் துவிச்சக்கரவண்டியோடி விபத்திற்குள்ளானதாக கருத்து தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவனை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் பார்வையிட்டு அறிக்கை பெற்றுள்ளனர்.
இந்நிலையிலேயே ; மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் திரிபுபடுத்திய செய்தியை வெளியிட்ட வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக பொலீஸ் முறைப்பாட்டு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a comment