தேசிய அரசாங்கம் மக்களின் சுமையை அதிகரிக்கும்- தயாசிறி

240 0

ஐ.தே.க தமது சுயநலத்துக்காகவே தேசிய அரசாங்கத்தை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக  ஸ்ரீ  லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

புதிய தேசிய அரசாங்கத்தின் மூலம் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்வடையும். இதனால் மேலதிகமாக பல அமைச்சர்களுக்கு சம்பளம், வாகனம், சலுகைகள் என்பன வழங்க நேரிடும். இது மக்களுக்கு சுமையாக அமையுமேயன்றி எவ்விதத்திலும் நன்மையளிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சி என்ற அடிப்படையில் மீண்டும் இக்கட்சியுடன் இணைந்து உருவாக்கும் தேசிய அரசாங்கம் செல்லுபடியற்றது.

ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்க எண்ணியிருக்கும் தேசிய அரசாங்கம் சட்டவிரோதமானது. அதை ஒரு போலியான நடவடிக்கை என்றே நாம் பார்க்கின்றோம். எனவே இதனை அங்கீகரிக்க முடியாது. பாராளுமன்றத்தில் இதைத் தோற்கடிப்பது குறித்து எமது கட்சி உறுப்பினர்களிடையே கலந்துரையாடி வருகின்றோம் எனவும் நேற்று நடைபெற்ற ஸ்ரீ ல.சு.க.யின் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேலும் கூறினார்.   

Leave a comment