யானை தந்தம், மான் கொம்பு கடத்திய கோவை வாலிபர் கைது

312 0

201610021055170201_palakkad-near-ivory-deer-antler-trafficking-youth-arrest_secvpfபாலக்காடு அருகே யானை தந்தம், மான் கொம்பு கடத்திய கோவை வாலிபரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தபாலக்காடு அருகே யானை தந்தம், மான் கொம்பு கடத்திய கோவை வாலிபரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பகுதியில் யானை தந்தம் மற்றும் மான்கொம்பு விற்பனை நடைபெறுவதாக அகழி டி.எஸ்.பி. சுப்பிரமணியத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து டி.எஸ்.பி. சுப்பிரமணியம், சோலையூர் இன்ஸ்பெக்டர் சந்தீப்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் அட்டப்பாடி, அகழி, கோட்டத்தரை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து மற்றும் காண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் குற்றவாளிகள் சிக்கவில்லை. மான்விற்பனையில் ஈடுபடுவர்களை பிடிக்க டி.எஸ்.பி. ஒரு திட்டம் வகுத்தார். அதன்படி பழைய குற்றவாளி ஒருவரை சந்தித்து விபரத்தை கூறினார்.

அதன்படி தற்போது மான் கொம்பு விற்பனையில் ஈடுபடும் நபரின் செல்போன் எண்ணை வாங்கினார். குறிப்பிட்ட செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட டி.எஸ்.பி. சுப்பிரமணியம் தான் தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளேன். எனக்கு மான் மற்றும் யானை தந்தங்கள் வேண்டும் என்று கூறினார்.

மறுமுனையில் பேசிய நபர் குறிப்பிட்ட இடத்திற்கு மான், மற்றும் யானை தந்தங்களை கொண்டு வருகிறேன். பணத்தை தயாராக வைத்திருங்கள் என்று கூறினர்.

அதன்படி மோட்டார் சைக்கிளில் நேற்று மாலை ஒரு வாலிபர் 9 கிலோ யானை தந்தம், 2 கிலோ மான்கொம்பு ஆகியவற்றை மூட்டையில் கட்டி எடுத்து வந்தார். வட்டலக்கி என்ற இடத்தில் வந்தபோது அங்கு மறைந்திருந்த போலீசார் வாலிபரை மடக்கிப்பிடித்தனர்.

அவர் வைத்திருந்த யானை தந்தம் மற்றும் மான் கொம்புகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் கடத்தலில் ஈடுபட்டவர் கோவை கணுவாயை சேர்ந்த சுந்தர ராஜூ (வயது 34) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.