பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த வருகிற 8-ந் தேதி அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்பதால், தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.
தமிழகத்தில் எத்தனை அணிகள் போட்டியிடும்? எந்த அணியில் எந்த கட்சி இருக்கும்? என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. என்றாலும் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து கட்சிகளின் தலைவர்கள் ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.


