ஆப்கானிஸ்தானில் தலீபான் தளபதி உள்பட 7 பயங்கரவாதிகள் பலி: ராணுவம் அதிரடி

681 28

ஹெல்மண்ட் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் தலீபான் பயங்கரவாத இயக்கத்தின் தளபதிகளில் ஒருவரான காரி ஜனன் உள்பட 7 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய தலீபான் பயங்கரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்க ராணுவ வீரர்கள் நாடு முழுவதும் தீவிர வேட்டையில் இறங்கி உள்ளனர். அந்த வகையில் ஹெல்மண்ட் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தினர்

இந்த தாக்குதலில் தலீபான் பயங்கரவாத இயக்கத்தின் தளபதிகளில் ஒருவரான காரி ஜனன் உள்பட 7 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 8 இடங்களில் அமைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் நிர்மூலமாக்கப்பட்டன. ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

Leave a comment