கம்பனிகளால் 1000 ரூபா வழங்க முடியாவிட்டால் அரசாங்கம் மிகுதி பணத்தை வழங்க வேண்டும்-விஜித ஹேரத்

232 0

தோட்டத்தொழிலாளர்களும் அரச ஊழியர்களே. அரச ஊழியர்களுக்கு கிடைக்கும் அதே அடிப்படை சம்பளத்தை தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என கூறும் ஜே.வி.பி.யின் ஊடகப்பேச்சாளர் விஜித ஹேரத், தோட்ட நிறுவனங்களால் ஆயிரம் ரூபாய் வழங்க முடியவில்லையென்றால் எஞ்சிய தொகையை அரசாங்கம் வழங்க வேண்டும். அதற்கான திட்டத்தை இம்முறை வரவு செலவு திட்டத்தில் கொண்டுவர வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

இத்தனை நாள் போராட்டத்தின் மூலமாக தோட்டத்தொழிலாளர்களுக்கு 20 ரூபாய் மாத்திரமே  அதிகரித்துள்ளது. கஷ்டப்படும் அம்மக்களுக்கு 20 ரூபாய் சம்பளம் அதிகரிக்கவா இவ்வளவு போராட்டம் நடத்தப்பட்டது.  தோட்டத் தொழிலாளர் பிரச்சினை அதிகரித்த நேரத்தில் அது குறித்து அமைச்சரவையில் ஆராய ஒரு அமைச்சரவை அமைச்சர் கூட இல்லாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

ஆகவே அரசாங்கம் தோட்டத் தொழிலாளர் பிரச்சினையில்  அக்கறையுடன் செயற்படவில்லை என்பதை அவர்கள் தொடர்ச்சியாக நிருபித்துவிட்டனர். 

Leave a comment