விக்ரமசிங்கவை இன்று மாலை சந்திக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி

372 0

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பள விவகாரம் குறித்து அமைச்சர் மனோ கணேஷன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. 

இந்த பேச்சுவார்த்தை இன்று மாலை 4 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. 

இதில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன், பிரதி தலைவர்களான வேலுசாமி இராதாகிருஷ்ணன் மற்றும் பழனி திகாம்பர் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். 

Leave a comment