வடக்கு விவசாயிகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள படைப்புழுவின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வ (காணொளி)

355 0

வடக்கில் படைப்புழுவைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் க.தெய்வேந்திரம் தலமையில், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில், வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலைய மேலதிக பணிப்பாளர் கலாநிதி எஸ்.ஜே.அரசகேசரி, முருங்கன் விவசாய ஆராய்ச்சி உதவி விவசாய பணிப்பாளர் எஸ்.இராஜேஸ்கண்ணா, பிரதி மாகாணப் பணிப்பாளர் எஸ்.அஞ்சனாதேவி மற்றும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கான விழிப்புணர்வை வழங்கியிருந்தனர்.

இதன்போது படைப் புழுவின் தாக்கத்தை ஆரம்பத்திலேயே எவ்வாறு இனங்காண்பது, அதனை கட்டுப்படுத்துவதற்கு இரசாயன முறையில் கையாள வேண்டிய விடயங்கள் என்பவை தொடர்பான அறிவுறுத்தல் அதிகாரிகளால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

மேலும் படைப்புழு தாக்கத்தின் வெளிப்பாடு எவ்வாறாக இருக்கும் என்பது தொடர்பான காணொளி விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது.

Leave a comment