அவமானப்பட்டார் சுமந்திரன் (வீடியோ இணைப்பு)

430 0

untitled-2யாழ்ப்பாண்தில் இன்று நடைபெற்ற நிகழ்வென்றில் கலந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வாயைக் கொடுத்து மக்களிடம் வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.
அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரவு எழுதிய இலங்கை அரசியல் யாப்பு புத்தகத்தின் ஆய்வரங்கு இன்று காலை நாச்சிமார் கோவிலடியில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பொது மக்கள், பல்கலைகழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சுமந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை, தமிழ் சிவில் சமூக அமையம் என்பவற்றினை கடுமமையாக சாடிப் பேசியிருந்தார்.
குறிப்பா தமிழ் மக்கள் பேரவையினால் நடாத்தப்பட்ட எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை ஏற்பாடு செய்தவர்களும், அதில் கலந்து கொண்டவர்களும் தமிழ் இனத்தின் துரோகிகள் என்ற கோணத்தில் தனது உரையினை நிகழ்த்தியிருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் சுமந்திரணை அங்கிருந்து வெளியேறுமாறு சத்தம் போட்டனர். மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்னவாயிற்று, காணாமல் போனவர்களின் கதி என்னவாயிற்று? என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
இருப்பினும் தன்னிடம் கேள்வி கேட்டவர்களை பெருட்படுத்தாது சுமந்திரன் தனது உரையினை ஆற்றிவிட்டு, நிகழ்வு நடைபெற்று முடிவதற்கு முன்பே அங்கிருந்து வெளியேற முயட்சித்திருந்தார்.
நிகழ்வு நடைபெற்ற மண்டபத்தினை விட்டு வெளியேறிய சுமந்திரணை மக்கள் முற்றுகையிட்டதால், தனது வாகனத்தில் கூட ஏறிக் கொள்ளாத சுமந்திரன் வடமாகாண சபை உறுப்பினர் இமானுவேல் ஆனல்டின் வாகனத்தில் ஏறி அங்கிருந்து ஓடி மறைந்துள்ளார்.