நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய இடமளிக்கப்பட மாட்டாது-ரணில்

336 0

எத்தகைய சவால்கள் ஏற்பட்டாலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய இடமளிக்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும் பல்வேறு துறைசார் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. களுத்துறை நகரில் நிர்மாணிக்கப்பட்ட புதிய சந்தைக் கட்டடம் மற்றும் பஸ் தரிப்பிடத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் பொழுதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

களுத்துறை நகரை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யவது குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. பெரு நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இந்த அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படுமெனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

உத்தேச புதிய அரசியலமைப்பு நாட்டை பிளவுபடுத்தும் என்று சில தரப்பினரால் முன்னெடுத்துச் செல்லப்படும் பிரச்சார நடவடிக்கைகளில் எதுவித உண்மையும் இல்லை எனவும் எந்தவொரு புதிய அரசியலமைப்பு யோசனையை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a comment