சில உள்ளூராட்சி மன்றங்களின் காலஎல்லை நீடிக்கப்படலாம்

13327 0

1790674906provinceminiசில உள்ளூராட்சி மன்றங்களின் காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.  23 உள்ளூராட்சி மன்றங்களின் காலஎல்லை இம் மாதம் 30ம் திகதியுடன் நிறைவடைகின்றன.
முன்னதாக, குறித்த உள்ளூராட்சி மன்றங்களின் காலஎல்லை கடந்த வருடம் டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், அதனை மேலும் ஆறு மாதங்களுக்கு (ஜூன் 30) நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டது.

இந்தநிலையில் குறித்த காலப் பகுதியும் நிறைவடையவுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் இறுதி இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும், பெரும்பாலும் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான கால எல்லை நீடிக்கப்படலாம் என, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வௌியிட்டுள்ளளன.

இதேவேளை, இந்த விடயம் குறித்து உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் அத தெரண வினவியது….

இது குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இவ்வாரத்தில் கலந்துரையாடல்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனையடுத்து, குறித்த உள்ளூராட்சி மன்றங்கள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment