இந்­தி­ய நிதி­யு­தவியில் காங்­கே­சன்­துறை துறை­முக அபி­வி­ருத்­தித் திட்­டம் ஆரம்­பம்

500 0

இந்­தி­யா­வின் நிதி­யு­த­வி­யு­டன் காங்­கே­சன்­துறை துறை­முக அபி­வி­ருத்­தித் திட்­டம் அடுத்த மாதம் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்­தி­யா­வின் 45.27 மில்­லி­யன் டொலர் நிதி­யு­த­வி­யு­டன் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள இந்­தத் திட்­டம் மூன்று ஆண்­டு­க­ளில் நிறை­வ­டை­யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்­ப­டை­யின் வச­முள்ள காங்­கே­சன்­துறை துறை­மு­கம், இந்­தத் திட்­டத்­தின் மூலம், சரக்­கு­க­ளைக் கையா­ளக் கூடிய துறை­மு­க­மாக மாற்­றப்­ப­டும்.பெப்­ர­வரி மாதம் 14ஆம் திகதி, பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, துறை­மு­கங்­கள் கப்­பல்­துறை அமைச்­சர் சாகல ரத்­நா­யக்க மற்­றும் மூத்த அதி­கா­ரி­கள், இந்­தத் திட்­டத்தை ஆரம்­பித்து வைக்­கும் நிகழ்­வில் பங்­கேற்­க­வுள்­ள­னர்.

காங்­கே­சன்­துறை துறை­முக அபி­வி­ருத்­தித் திட்­டத்­தின் மூலம், இறக்­கு­மதி, ஏற்­று­ம­தித் துறைக்கு உத­வி­யாக இருப்­ப­து­டன், நாட்­டின் பொரு­ளா­தா­ரத்­தி­லும் நேர­டி­யான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும். அத்­து­டன், பிர­தே­சத்­தின் உட்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளும், பெரு­ம­ளவு நேரடி மற்­றும் மறை­முக தொழில்­வாய்ப்­பு­க­ளும் கிடைக்­கும் என்று, அமைச்­சர் சாகல ரத்­நா­யக்க தெரி­வித்­துள்­ளார்.

‘இந்த திட்­டத்­தின் கீழ், சரக்­குக் கப்­பல்­கள் வரக் கூடிய வகை­யில், துறை­மு­கப் பகுதி 9 மீற்­றர் வரை ஆழ­மாக்­கப்­ப­ட­வுள்­ளது. தற்­போ­துள்ள அலை­தாங்கி முற்­றி­லு­மாக மாற்­றி­ய­மைக்­கப்­ப­ட­வுள்­ளது. தற்­போ­துள்ள ஒரு இறங்­கு­துறை முழு­மை­யாக மறு­சீ­ர­மைக்­கப்­ப­டும். அத்­து­டன் மேலும் ஒரு புதிய இறங்­கு­து­றை­யும் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.

காங்­கே­சன்­துறை துறை­முக சுற்­றுப்­பு­றத்­தில் 15 ஏக்­கர் பரப்­ப­ள­வுள்ள இடத்­தில், திட்­டத்­தின் ஆரம்­பக் கட்ட வேலை­களை துறை­முக அதி­கா­ர­சபை ஏற்­க­னவே ஆரம்­பித்­துள்­ளது. அடுத்­த­கட்­ட­மாக 50 ஏக்­கர் பரப்­ப­ள­வுக்கு இந்த திட்­டம் விரி­வு­ப­டுத்­தப்­ப­டும்.

திட்­டத்­தின் ஆரம்ப திட்­ட­மி­டல் செயல்­மு­றை­க­ளுக்­கான ஆலோ­ச­கர்­களை நிய­மிக்­கும் நட­வ­டிக்­கை­களை துறை­முக அதி­கார சபை ஆரம்­பித்­துள்­ளது. ஆலோ­ச­கர்­க­ளின் மதிப்­பீ­டு­க­ளைத் தொடர்ந்து, வெளிப்­ப­டை­யான முறை­யில் கட்­டு­மா­னம் செய்­ப­வர் தெரிவு செய்­யப்­பட்டு, கட்­டு­மா­னப் பணி­கள் ஆரம்­பிக்­கப்­ப­டும் என்­றும், அமைச்­சர் சாகல ரத்­நா­யக்க நம்­பிக்கை வெளி­யிட்­டுள்­ளார்.

Leave a comment