சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டோர் கடற்படையினரால் கைது

5078 17

இலங்கையின் கிழக்கு கடற்படை மற்றும் திருகோணமலை பொலிஸார் இணைந்து நேற்று  வியாழக்கிழமை முன்னெடுத்த விஷேட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, சட்ட விரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு சட்ட விரோத மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரெக்டர்கள் 4 மற்றும் கனரக வாகனமொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு அவை மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

இம்மாதம் 6 ஆம் திகதியும் மட்டக்களப்பு மற்றும், களுதாவளை ஆகிய பிரதேசங்களிலும் இவ்வாறு சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

Leave a comment