அரச மர நிழலில்
அமைதியாய் கிடந்த
பிள்ளையார் கோயிலை
இடித்தழித்த சுவட்டில்
புதிதாய் குடியேறிய
புத்தருக்குக் குடமுழுக்காம்
இனி முல்லைத் தீவும்
சிங்களத் தீவென்று
சிங்களச் சனத்துக்கு
கு……….யில் அடித்த புழுகம்
பீக் குளமெல்லாம்
பொறுக்கி எடுத்த
பூக்களோடு – வரிசையாய்
புறப்பட்டு விட்டது சனம்
புத்தருக்குக் குடமுழுக்காம்
பௌத்தத்திற்கு முன்னுரிமை
குடுக்குறதில் பிரச்சனையில்லை எண்டு
எழுதிக் கொடுத்துப் போட்டு
பிக்குகளுக்கு முன்னால நிண்டு
வெட்டி வீரம் கதைக்கிற
எங்கண்ட சண்டியர் மாரை
நினைச்சால் சிரிப்பாக் கிடக்குது
நாளைக்கு ஆர்ப்பாட்டம்-
பேரணிக்கு அழைப்பு வரும்
ஒரு ஐம்பது அறுபதுபேர்
கூடினின்று கூச்சல் போட்டபின்
கலைந் போய்விடும் கூட்டம்
இரண்டு மூன்று நாள் கழித்து
பேப்பறில சேதிவரும்
வள்ளி புனத்தில்
வைரவர் கோவில் காணியில்
பிக்குகள் நின்று ஏதோ கிடங்கு வெட்டுவதாய்
புதிதாய் குடியேறிய
புத்தருக்குக் குடமுழுக்காம்
பிள்ளையார் கோயிலை
இடித்தழித்த சுவட்டில்
கலியுகன்
24.01.2019


