தமிழ்ப் புத்தாண்டு, தைப்பொங்கல் விழா -2019 பிரித்தானியா

424 0

பிரித்தானியாவின் லெஸ்ரர் (Leicester) மாநகரத்தில் தமிழ்ப் புத்தாண்டு, தைப்பொங்கல் விழா 20-01-2019 ஞாயிற்றுக்கிழமை fpoik Maple Events & Banqueting 148C Melton Road, Leicester, Leicester, LE4 5EE. மண்டபத்தில் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் வழிநடத்தலில் தமிழர் நலன்புரிச்சங்கம் லெஸ்ரர், லெஸ்ரர் பூபதி விழையாட்டுக்கழகம், தமிழ்க் கல்விக்கூடம் லெஸ்ரர் இணைந்து இவ்விழாவை நடாத்தியிருந்தனர்.
மண்டபம் நிறைந்த மக்கள் முன் மங்கள விளக்கேற்றலுடன் பி.ப3 மணிக்கு விழா ஆரம்பமானது. பிரித்தானியத் தேசியக்கொடியை லெஸ்ரர் மாநகரமன்ற உறுப்பினர் Baljit Singh ஏற்றிவைக்க எம் தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு லெஸ்ரர் பொறுப்பாளர் ஸ்ராலின் ஏற்றிவைத்தார்.

லெஸ்ரர் தமிழர் நலன்புரிச்சங்க தலைவர் திரு. மகேந்திரராசா தில்லைநாதனின் வரவேற்புரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. நடன ஆசிரியர்கள் தர்மினி சிவதீஸ், சமீனா திருக்குமார் ஆகியோரின் மாணவர்கள் வழங்கிய நடனங்களும், தமிழ்ச்செல்வன் சற்குணநாதன், ஜெனிற்றா ராஜ்குமார் ஆகியோரால் நெறிப்படுத்தப்பட்ட மாணவர்கள் வழங்கிய நடனங்களும், மாணவர்கள் தாங்களே நெறிப்படுத்தி வழங்கிய நடனங்களுமாகப் பல நடனங்கள் இடம்பெற்றன. சிறுவர்களின் கருத்துமிக்க பேச்சுக்கள், கவிதைகள், திருக்குறள், ஆத்திசூடி எனப் பல நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றது. சங்கீத ஆசிரியர்கள் விகிர்தா ஜெகதாஸ், திரு தீனதயாளன் ஆகியோரின் மாணவர்கள் வழங்கிய பாடல்களும் சிறப்பாக இருந்தது. திருமதி. துஸ்ஸகுமாரியின் ஆக்கத்திலும் நெறியாள்கையிலும் அரங்கேறிய இயற்கையும் இறையும் நாடகம் சூழல் பற்றிய சிந்தையைத் தூண்டியது. ATS Karaoke குழுவினரின் இசைநிகழ்வு பார்வையாளர்களை பரவசத்தில் மூழ்கவைத்ததது குறிப்பிடத்தக்கது.
விழாவில் கலந்து சிறப்பித்த லெஸ்ரர் மாநகர உறுப்பினர்கள் Mr.Rashmikant Joshi, Mrs.Rita Patel ஆகியோரும் எமக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து சிறப்புரை வழங்கியிருந்தனர்.
லெஸ்ரர் தமிழர் நலன்புரிச்சங்கத்தின் செயலாளர் திரு. கனகலிங்கம் திருநாவுக்கரசு அவர்களின் நன்றியுரையைத் தொடர்ந்;து தேசியக்கொடிகள் கையேந்தப்பட்டு நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றன.

Leave a comment