சந்திரிக்கா காலாவதியான புடின் – உதய கம்மம்பில

236 0

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க என்பவர் காலாவதியான “புடின்” போன்ற ஒருவர் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில எம்.பி. தெரிவித்தார்.

சுவையான உணவுப் பொருளான புடினை காலாவதியானதன் பின்னர் சுப்பர் மார்க்கட்டில் காட்சிப் பொருளாக வைத்தாலும் அது பெருமதியற்ற ஒன்றாகும். இதுபோன்று தான் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் நிலையும் ஆகும். நாட்டைத் தாரைவார்க்கும் நடவடிக்கையிலிருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறு இவரிடம் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நேற்று (21) அக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். 

Leave a comment