மஹிந்தவினால் சுதந்திரக் கட்சிக்கு சவால் விடுக்க முடியாது – துமிந்த

534 0

download-1-32பத்து கட்சிகளை அமைத்தாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு சவால் விடுக்க முடியாது என அமைச்சரும் கட்சியின் பொதுச் செயலாளருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ ஒரு கட்சி அல்ல பத்து கட்சிகளை அமைத்தாலும் சுதந்திரக் கட்சிக்கு அது  எந்த வகையிலும் சவாலாகவோ அல்லது அச்சுறுத்தலாகவோஅமையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டு கட்சியை அழிவடையச் செய்வதனை விடவும் கட்சியை விட்டு வெளியேறிச் செல்வது பொருத்தமானது என அவா குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ புதிய அரசியல் கட்சி அமைப்பதற்கு நாம் எந்த வகையிலும் தடையை ஏற்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் தோல்வியடைந்து வீடு சென்ற நாள் முதல் புதிய அரசியல் கட்சி அமைப்பதாக மஹிந்தவும் உறவினர்களும் தெரிவித்து வரும் போதிலும் இதுவரையில் கட்சி அமைக்கவில்லை என துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a comment