ஞானசார தேரரை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் முறையிடுவேன்- துமிந்த

302 0

பொதுபல சேனாவின் கலகொட அத்தே ஞானசார தேரர் பாரியதொரு குற்றத்தைப் புரிந்தவர் அல்லர் எனவும், அவர் நாட்டுக்காகவும், இராணுவ வீரர்களுக்காகவும் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்துள்ளாரெனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரை விடுவிப்பதில் எவ்வித தவறும் இல்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னர் ஞானசார தேரரை விடுவிக்கும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் பாரிய இன மோதல்களுக்கு பின்னணிக் காரணியாக செயற்பட்டவர் யார் என்பதை இந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, புத்தி சுவாதீனமுள்ள அனைவரும் அறிந்து வைத்துள்ள நிலையில், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தவர் என நற்சான்றிதல் வழங்குவது எந்தளவுக்கு பொருத்தமானது என்பது நல்லுள்ளம் உள்ள அனைவருக்கும் பிரச்சினையாகவே இருக்கும் என்பது மட்டும் மூடி மறைக்க முடியாத உண்மையாகும்.  

Leave a comment