இலங்கை மக்களுடனான தமது உறவு சிங்களம் பேசும் மக்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்று தெரிவித்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் செங் யுவான், தமிழ் மொழி பேசும் மக்களையும் தமது உறவு வலயத்தில் வைக்கவே விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
இலங்கையிலுள்ள சீன தொழில் முயற்சி திட்ட வளாகங்களில், இலங்கையின் மொழிக்கொள்கை பின்பற்றப்படுவதில்லை. விசேடமாக, தமிழ் மொழி புறக்கணிப்புக்கு உள்ளாகிறது என்ற புகார், சமீப காலங்களில் மேலெழுந்துள்ளது. இவை பற்றி சீன தூதுவரை சந்தித்து நேரடியாக கலந்துரையாட விரும்புவதாக, தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சு, கொழும்பிலுள்ள சீன தூதரகத்துக்கு அறிவித்திருந்தது. அதையடுத்து, அமைச்சர் மனோ கணேசனை, தனது அதிகாரபூர்வ இல்லத்துக்கு வருகை தரும்படி, சீன தூதுவர் செங் யுவான் விடுத்த அழைப்பை, அமைச்சர் மனோ கணேசன் ஏற்றுக்கொண்டதையடுத்து, இன்று இச்சந்திப்பி இடம்பெற்றிருந்தது.
இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறியுள்ளமையானது,
இலங்கையில் இடம்பெறும் சீன அபிவிருத்தி மற்றும் தொழிற்றிட்டங்களின் பெயர்ப் பலகைகளில், தமிழ் மொழியைத் திட்டமிட்டு அவமதிக்கும் நோக்கம் கிடையாது என்றும் இனிமேல், சீன நிறுவனங்களின் பெயர்பலகைகள் இலங்கையில் அமைக்கப்படும் போது, தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் அமைச்சுடன் கலந்துரையாடிய பின்னர் அவற்றை அமைப்பதற்காக, வர்த்தகப் பிரிவு அதிகாரியை தான் நியமிப்பதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
இன்ச்சந்திப்பின் போது சென தூதுவர் அமைச்ஜ்ச்ஜர் மனோ கணேசனிடம் கூறியதாவது,
இதுவரை அமைக்கப்பட்டுள்ள தொழிற்றிட்டங்களின் பெயர் பலகைகளில் உள்ள எழுத்து பிழைகள் அல்லது மொழி புறக்கணிப்பு போன்றவை, படிப்படியாக திருத்தப்படும் என்று உறுதியளித்துள்ள அவர், அவற்றுக்கு, மொழிபெயர்ப்பு போன்ற விடயங்களுக்கு, அமைச்சசை நாடுவதாகவும் இனிமேல், சீன நிறுவனங்களின் பெயர்பலகைகள் அமைக்கப்படும் போது அமைச்சுடன் நிச்சயமாக கலந்துரையாடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன்போது பதிலளித்த அமைச்சர் மனோ கணேசன்,
சீன தொழிற்றிட்டங்களின் பெயர் பலகைகளில், தமிழ் மொழி புறக்கணிப்பு தமிழ் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் இலங்கையில், சிங்களம், தமிழ் ஆகியவை தேசிய அரசகரும மொழிகள் என்றும் ஆங்கிலம் இணைப்பு மொழியாகும் என்றும் விளக்கமளித்தார்.
அத்தோடு, இந்த மொழி விவகாரங்களுக்காக நியமிக்கப்படும் அதிகாரியுடன் இணைந்து செயற்படுவதற்கு, அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் பணிப்பாளரை நியமிப்பதாகவுமு் அவர் கூறினார்.


