ரணில் – அனுர – சம்பந்தன் ஆகியோருக்கு எந்த தகுதியும் இல்லை-கெஹலிய

192 0

ஜனநாயகம்  பற்றி  கருத்துரைக்கும்  எவ்வித  தகுதிகளும்  ஐக்கிய  தேசியக் கட்சி,  மக்கள் விடுதலை  முன்னணி, மற்றும்  தமிழ்த் தேசிய  கூட்டமைப்பினர் ஆகிய  தரப்பினர்களுக்கு  கிடையாது.  

தனிமனித அடிப்படை  உரிமைகளில்  ஒன்றான  தேர்தல்  உரிமையினை  இம்மூன்று   தரப்பினரும் தமது  சுய   தேவைக்காக  பிற்போடுவது  பாரிய  ஜனநாயக  மீறல்  செயற்பாடாகும்  என  பாராளுமன்ற    உறுப்பினர்   கேஹலிய   ரம்புக்வெல   தெரிவித்தார்.

எதிர்க்கட்சி  தலைவர்   அலுவலகத்தில்  இன்று வெள்ளிக்கிழமை  இடம் பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில்  கலந்துகொண்டு   கருத்துரைக்கும் போதே  அவர்  மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர்  மேலும்   குறிப்பிடுகையில்,

 மறுபுறம்  எதிர்க்கட்சி அமைப்பினராக  செயற்பட்ட   மக்கள்  விடுதலை  முன்னணியினர்    பொதுஜன  பெரமுன முன்னணியினரது  செயற்பாடுகளில்  காணப்படுகின்ற  ஒரு சில  குறைபாடுகளை  சுட்டிக்காட்டி   ஜனநாயகம்  தொடர்பில்  தொடர்ந்து  பொய்யான  பிரச்சாரங்களை மாத்திரமே முன்னெடுத்தனர். 

இவ்விரு   கட்சிகளும்     எதிர்க்கட்சி    பதவியில் இருந்துகொண்டு   ஐக்கிய  தேசிய  கட்சியின்  பங்காளிக்  கட்சியின ராகவே  செயற்பட்டனர்.   

இவர்களின்  செயற்பாடு  ஒருபோதும்  ஜனநாயகத்தை  பாதுகாப்பதாக  காணப்படவில்லை.  மாறாக உண்மையான  ஜனநாயக  கொள்கைகளுக்கு  முரணாகவே   காணப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment