தமிழர்களின் வாழ்வில் நலமும், வளமும் பெருகி, அமைதியும், இன்பமும் நிலைக்கட்டும்’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறி உள்ளார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
உலகெங்கும் வாழும் தமிழர்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில், எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தை திங்கள் முதல் நாளான பொங்கல் திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்களில் வண்ணக் கோலங்களிட்டு, மஞ்சள், கரும்பு, இஞ்சி, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை படையலிட்டு, புதுப்பானையில் புது அரிசியிட்டு, அவ்வரிசி பொங்கும் போது ‘பொங்கலோ, பொங்கல்’ என்று மங்கல ஒலி எழுப்பி, இறைவனை வணங்கி, பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள்.