ஜனநாயக உரிமையை தென்னிலங்கை பேரினவாதிகளே அனுபவிக்கின்றனர்-அனந்தி

203 0

இலங்கையில் ஜனநாயகம் என்பது தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்ததாக உள்ளது. தமிழர்களின் ஜனநாயகம் எல்லா பக்கத்தாலும் மீறப்பட்டு உள்ளன என முன்னாள் வடமாகாண மாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.   

உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது. 

அந்நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில் ,

எங்கள் இனத்தின் மீதான படுகொலைகளின் நினைவேந்தல்களை அனுஸ்டிக்க தடைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. ஆனாலும் என்றோ ஒரு நாள் எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்பி அதற்கான செயற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். 

இந்த படுகொலை நடைபெற்று 45 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் அதற்கு நீதி கிடைக்கவில்லை. இலங்கையில் ஜனநாயகம் என்பது தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்ததாக உள்ளது. தமிழர்களுக்கு ஜனநாயகம் எல்லா பக்கத்தாலும் மீறப்பட்டுள்ளன. ஜனநாயக உரிமையை அனுபவிப்பவர்களாக தென்னிலங்கை பேரினவாதிகளே அனுபவிக்கின்றார்கள். 

இவ்வாறான நினைவேந்தல்கள் ஊடாகவே எமக்கு அடுத்து வரும் சந்ததிகள் நாம் எவ்வாறான அடக்கு முறைக்குள் வாழ்ந்தோம் எதனால் ஆயுத போராட்டம் ஆரம்பமானது எனும் வரலாற்றை அறிந்து கொள்ள முடியும். என மேலும் தெரிவித்தார். 

Leave a comment