இராணுவ வாகனம் – முச்சக்கரவண்டி விபத்து, மூவர் பலி

4789 17

பளை இயக்கச்சி பகுதியில் இராணுவ வாகனத்தோடு முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். 
இச்சம்பவம் இன்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பளைப்பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரும் கரந்தாயைச் சேர்ந்த குகன் என்பவரும் அப்பகுதியில் இயங்கும் பண்ணை ஒன்றில் பணியாற்றும் சாந்தன் என்ற மூவருமே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

 உயிரிழந்த மூவரின் சடலங்களும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த விபத்து தொடரிபில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment