ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஏற்கனவே தாமதமாகியுள்ள ஏனைய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
கேகாலை, கொட்டியாக்கும்புர பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மத நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பல தேர்தல்கள் எதிரில் நடைபெற உள்ளதால் வரவு செலவு திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
அதன் பின்னர் மீண்டும் விலைவாசிகள் அதிகரிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் அவ்வாறு அதிகரிப்பதற்கு தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.


