நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து பாராளுமன்ற அதிகாரங்களை வலுப்படுத்தல் மற்றும் மாகாண சபைகளை வலுப்படுத்தல் உள்ளிட்ட முக்கிய பரிந்துரைகள் மற்றும் யோசனைகளுடன் உத்தேச புதிய அரசியலமைப்பின் நகல் வரைபு அடுத்த வாரம் சபையில் சமர்பிக்கப்பட உள்ளது.
அரசியலமைப்பு தொடர்பாக நிபுணர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் மற்றும் பரிந்துரை உள்வாங்கப்பட்ட நிலையிலேயே நகல் வரைபு சமர்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழு புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் முன்னெடுத்து வருகின்றது.


