காணி விடுவிப்புக்குக் கால அவகாசம்

228 0

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  தேவன் பிட்டி மக்களின் காணி பிரச்சினை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக காணி உரித்து நிர்ணய திணைக்களம் சார்பாக,  மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மூன்று மாத கால அவகாசத்தினை  கோரியுள்ளனர்.  

குறித்த சம்பவம் தொடர்காக மேலும் தெரிய வருகையில்,,

கடந்த 2006 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு காணி நிர்வாக திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்படும் 13 வருடங்கள் ஆகியும்  தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய காணி வழங்கப்படவில்லை என்பதன் அடிப்படையில் மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தேவன் பிட்டி கிராமத்தைச் சேர்ந்த   53 பேர் தங்களுக்கு இன்னமும் விவசாய காணிகள் வழங்கவில்லை என கோரி பல தடவை மாந்தை பிரதேச செயலகத்தில் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் உரிய பதில் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தேவன் பிட்டி கிராமத்தைச் சேர்ந்த    விவசாய அமைப்பின் பிரதி நிதிகள் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் உதவியுடன்  இலங்கை  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மன்னார் அலுவலகத்தில் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி (17.09.2018) முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தனர்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர்  பிரிவுக்குட்பட்ட தேவன் பிட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பெரும்பாலும் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்டாலும் 6 மாத காலம் மாத்திரமே மீன் பிடியை மேற்கொள்ள முடியும்.

அதன் காரனமாக ஏனைய 6 மாத காலமும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விவசாய செய்கை களை மேற்கொள்வதற்காக விவசாய காணிகளை 1992 ஆம் ஆண்டு மாந்தை மேற்கு பிரதேசச் செயளாலரின் ஆலோசனைக்கு அமைவாக பிரதேச மக்கள் கோரி இருந்தனர்.

இதன் பிரகாரம்  2006 ஆம் ஆண்டு 53 பேருக்கு பாலி ஆறு மற்றும் வெள்ளாங்குளம் அருகே அமைந்துள்ள காணிகளை வழங்கக் கோரி வட கிழக்கு காணி நிர்வாக திணைக்களத்தினால் பெயர் விபரங்கள் அடங்கிய அனுமதி வழங்கப்பட்ட போதிலும் 13 வருடங்கள் கடந்தும் இது வரை மாந்தை மேற்கு பிரதேசச்  செயலகத்தினால் தங்களுக்கு எந்தவித காணிகளும் வழங்கப்படவில்லை எனவும்,இது வரை எழுத்து பூர்வமான பதில்களும் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் , தற்போது தாங்கள் வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்படுவதாகவும் எனவே தங்களுக்கு வழங்க தீர்மானித்திருந்த காணிகளை விரைவாக பெற்றுதார உதவி கோரியும்   இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மன்னார் உப அலுவலகத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில்   நேற்று வெள்ளிக்கிழமை (4) மாலை 2 மணியளவில்  மன்னார் மனித உரிமை ஆணைகுழுவின் உப அலுவலகத்தில் விசாரனைகள் இடம்பெற்றது.

குறித்த  மக்களின் முறைப்பாட்டின் அடிப்படையில் மாகாண காணி  திணைக்கள ஆணையாளர் சிரேஸ்ட நில  அத்தியட்சகர் , பணிப்பாளர்,  காணி உரித்து நிர்வாக திணைக்களம், மன்னார் மாவட்ட செயலகம் , மாந்தை மேற்கு பிரதேசச் செயலகம், ஆகியவற்றின் பிரதி நிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

விசாரணையின் பின்னர் குறித்த தேவன் பிட்டி மக்களின் பிரச்சினையை ஒரு மாத காலப்பகுதில் முடிவுறுத்தி தரும் படி கோரப்பட்ட போதிலும் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் அதிகலவான பகுதிகள் நில அளவை செய்யப்படவில்லை என்பதனால் இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக மூன்று மாத கால அவகாசம் காணி உரித்து நிர்ணய திணைக்களம் சார்பாக கோரியுள்ளனர்.

பாதீக்கப்பட்ட மக்கள் சார்பாக சட்டத்தரணி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமார் மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment