அடுத்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், டெம் எலிசபெத் போட்டியிட உள்ளார்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் களம் காண்கிறார்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக ஜனநாயக கட்சியை சேர்ந்தவரும், செனட் சபை பெண் உறுப்பினருமான டெம் எலிசபெத் அறிவித்துள்ளார்.
69 வயதான டெம் எலிசபெத் அரசியலில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர். இவர் டிரம்புக்கு பலமான போட்டியாளராக திகழ்வார் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


