சுனாமி’ எனும் ஆழிப்பேரலை கோரத்தாண்டவத்தின் 14ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

330 0

தமிழீழத்தில் சுனாமி ஏற்பட்டு 14 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அதில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்களை நினைவுக்கூரும் முகமாக உயி ரிழந்தவர்களுக்காக பொது மக்கள் அனைவரும் இன்று இரண்டு நிமிடங்கள் மெளனஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.

இந்தக் கோரத் தாண்டவத்தில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானோரை நினைவுகூர்ந்து நாடு முழுவதிலும் இன்று அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இன்று காலை சுனாமி நினைவாலய நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இன்று காலை 09.25 தொடக்கம் 09.27 வரை இரண்டு நிமிடங்கள் மெளனஞ்சலி செலுத்தும் படி கோரப்பட்டுள்ளது.

Leave a comment