தேவையேற்பட்டால் புதிய சட்டமொழுங்கு அமைச்சரை நியமிப்பேன் – சிறிசேன

301 0

தேவையேற்பட்டால் இலங்கையின் சட்டமொழுங்கு அமைச்சராக புதியவர் ஒருவரை நியமிப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கியதேசிய கட்சி குழுவொன்றை சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்

இலங்கையின் காவல்துறையின் அதிகாரத்தை  நான் பொறுப்பேற்ற பின்னர் என்னை கொல்வதற்கான சதி முயற்சிகள் குறித்த விசாரiகைள் சிறப்பாக இடம்பெறுகின்றன  என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான விசாரiணைகள் உரிய விதத்தில் சட்டத்தின் அடிப்படையில் இடம்பெறவேண்டும் என நான் தெரிவித்து வந்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்

இவ்வேளை குறுக்கிட்ட அமைச்சர் ரஞ்சித்மத்து பண்டார நான் விசாரணைகளை உரிய முறையில் முன்னெடுப்பேன் என தெரிவித்துள்ளார்

இதற்கு சீற்றத்துடன் பதிலளித்துள்ள சிறிசேன  முன்னைய அரசாங்கத்தின் போது விசாரiணைகள் உரிய முறையில் இடம்பெறவில்லை சட்டமொழுங்கு அமைச்சிற்கு பதில் பிரதமர் அலுவலகமே விசாரணைகளை கையாண்டது என தெரிவித்துள்ளார்.

ரஞ்சித் மத்துபண்டாரவிடம் சீறிப்பாய்ந்த சிறிசேன  முன்னரும் நீங்கள் இந்த சட்டமொழுங்கு அமைச்சராக பதவி வகித்தீர்கள் அப்போது உங்கள் வேலையை நீங்கள் செய்தீர்களா இல்லையே பிரதமர் அலுவலகமே அதனை செய்தது என தெரிவித்துள்ளார்.

தேவைப்பட்டால் நான் தகுதிவாய்ந்த ஒருவரை அந்த பதவிக்கு நியமிப்பேன் என சிறிசேன தெரிவித்துள்ளார்.

Leave a comment