பட்டுவேட்டி கனவுடன் இருந்தவரின் பரிதாப நிலை!

16947 0

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்தப்படுவதைத்தான் அறிந்திருபீர்கள். ஆனால் மூன்று மாங்காய் வீழ்த்திய நரியின் தந்திரத்தை சிறிலங்காவின் நாடாளுமன்றில் காணக்கூடியதாக இருந்தது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களாக மைத்திரியையும் மகிந்தவையும் வீழ்த்தி விட்ட ரணில், சம்மந்தன் என்ற மூன்றாவது மாங்காயையும் ( முற்றிய பழம்) வீழ்த்தி விட்டார்.

காலம் காலமாக சிங்கள இனவாத அரசாங்கங்களுக்கு சாமரம் வீசும் தமிழர் கூட்டம் ஒன்று எப்போதும் இருந்துகொண்டுதான் உள்ளது. அந்த வரிசையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முள்ளிவாய்கால் முடிவின் பின்னர் எச்சில் எலும்பு துண்டுகளை கௌவியபடி திரிகின்றது.

ரணில் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நிபந்தனை அற்ற ஆதரவு எனக் கூறி செல்ல நாய்குட்டிகளாக வாலாட்டிய கூட்டமைப்பின் வால் ஒட்ட நறுக்கப்பட்டுள்ளது.

ரணில்- மைத்திரியின் கபட நாடகத்தில் மகிந்தவுடன் சம்மந்தனும் மூக்குடைபட்டுப் போனார்

ரணில் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கூட்டமைப்பு யாருக்கும் ஆதரவு வழங்காமல் நடுநிலை வகிப்பதே சரியானது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பலதடவைகள் வலியுறுத்தி வந்தார். ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு கண்மூடித்தனமாக ரணிலுக்கு தமது ஆதரவினை வழங்கியது.

ரணில் – மைத்திரி நாடகம் முடிவுக்கு வந்த நிலையில் சம்பந்தரின் எதிர்கட்சி தலைவர் பதவி பறிபோனது. பிரதமர் கனவில் மிதந்து கொண்டிருக்கும் சம்பந்தனுக்கு கையில் இருந்த எதிர்கட்சி தலைவர் பதவியும் கஜாபுயலில் சிக்கிக் கொண்டது.பட்டுவேட்டி பற்றிய கனவில் இருந்தபோது, கட்டியிருந்த கோவணமும் காணமல் போன கதையாய் போனது சம்பந்தரின் நிலை.

நாயை ஆதரிப்பதா? நரியை ஆதரிப்பதா? என்ற விடயங்களை ஆராய்ந்த பிற்பாடே நரியை ஆதரிப்பது என்ற முடிவினை தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் எடுத்தனர் என கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

நரியை ஆதரிதவர்கள் ஆதரிப்பார் யாரும் இன்றி அழுகின்றனர். சிங்கள பூதங்கள் என்றும் இனவாதத் தீயை கக்கும் எரிமலைகளாகவே உள்ளனர்.

தமிழ்த் தேசியவாதத்தை உடைப்பதற்கு சிங்கள இன வெறி அரசு எந்த வேடத்தையும் தரிக்க தயாராகவே உள்ளது. தமிழ் மக்கள் ஆளுக்கு ஒரு கட்சி தொடங்கி சிதறி சின்னாபின்னமாகி சீரழிகின்றனர்……

தந்தை செல்வா சொன்னது போல ”தமிழர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்”

Leave a comment