முன்னாள் ஜனாதிபதியாகி முன்னாள் பிரதமராகி முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராகுவார் மகிந்த!

314 0

முன்னாள் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்‌ஸ தற்பொழுது முன்னாள் பிரதமராகி மீண்டும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக மாறப்போவதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் தொடர்பாக இரா.சம்பந்தன் இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டார்.  இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே ரவூப் ஹக்கீம்  இவ்வாறு கூறினார்.

அத்துடன் முன்பு ஒரே சமயத்தில் இரண்டு பிரதமர்கள் நாட்டில் இருந்தமை போன்று தற்பொழுது இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சில நாட்கள் பிரதமராக செயற்பட்ட மஹிந்த ராஜபக்‌ஸ மீண்டும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

எதிரணியில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களில் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மாத்திரமே சுயபுத்தியுடன் இருப்பவர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment