பல மில்லியன் ரூபாய்களை ​மோசடி செய்த பெண் கைது

23235 101

நபர்களை கனடாவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து பல மில்லியன் ரூபாய்களை மோச​டி செய்த பெண்ணொருவர், நவகமுவ பிரதேசத்தில் வைத்து குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணுக்கு எதிராக 51 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இதற்கமைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் சந்தேகநபரைக் கைதுசெய்யும் போது, அவரிடமிருந்து 350 கிராம் நிறையுடைய தங்க ஆபரணங்கள் 50,000 ரூபாய் பணம், வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் 72, வங்கி புத்தகங்கள் 51 மற்றும் 50 ஏ.டி.எம் அட்டைகள் என்பன மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment