ஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரும் அதன் ஊடக பேச்சாளருமான துளசி என அழைக்கப்படும் கணேசலிங்கம் சந்திரலிங்கத்தை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் வாக்குமூலமொன்றை பெற்றுக் கொள்வதற்காக நெடுங்கேணி சேணப்பிழவில் வசிக்கும் துளசியை எதிர்வரும் 19ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் இரண்டாம் மாடிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
என்ன காரணத்திற்காக விசாரணைக்கு அழைக்கப்படுகின்றார் என்பது தொடர்பில் அந்தக கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை.

ஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரும் அதன் ஊடக பேச்சாளருமான துளசி என அழைக்கப்படும் கணேசலிங்கம் சந்திரலிங்கத்தை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.