போலி தங்க நாணயக்குற்றிகளை ஏமாற்றி விற்றவருக்கு விளக்கமறியல்

282 0

போலி  தங்க நாணயகுற்றிகளை ஏமாற்றி 23 இலட்சம் ரூபாய்க்கு விற்றவருக்கு எத்ர்வரும் 26 ஆம் திகதிவரை  விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது

கிளிநொச்சி விசேட பிரிவு பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையிலான குழுவினர் நடத்திய விசாரணைகளில் போலி  தங்க நாணயகுற்றிகளை ஏமாற்றி விற்ற என்ற குற்றச் சாட்டில் அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அத்தோடு அவர் வசமிருந்த போலி தங்க நாணயகுற்றிகள்,மூன்று இலட்சம் பெறுமதியான பணம் ,அவரது கார் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று சந்தேக நபரை சான்றுப் பொருட்களுடன் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்கவும் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தவும்  கிளிநொச்சி நீதவான் நீதிமன்று நேற்று  உத்தரவிட்டது

விடுதலைப் புலிகளின் காலத்தில் பதுக்கி வைக்கப்பட்ட தங்க நாணயக் குறிகள் தன்னிடம் இருப்பதாக ஒருவரிடம்  வியாபார ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் அண்மையில் கிளிநொச்சி புகையிரத வீதியில் வைத்து   இரு குழுவினரும் பணத்தைக் கொடுத்து பொருளை மாற்றியுள்ளனர்

இதனை அவதானித்த பொலிஸ் விசேட குழு பொறுப்பதிகாரி  சந்துரங்க தலைமையிலான குழுவினர்   இவர்கள் மீது சந்தேகம் கொண்டு    இலக்கங்களைக் குறிப்பெடுத்து விசாரணைகளை முன்னெடுத்த போதே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அதனுடன் சம்பந்தப்பட்ட மேலும் இருவர் இருப்பதாகவும் அவரைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment