உயர்தர மாணவர்கள் இருவரிடமிருந்து கஞ்சா தூள் மீட்பு

281 0

பதுளை மாநகரின் பிரதான பாடசாலையொன்றின் க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்கள் இருவர் இரண்டாயிரம் மில்லி கிராம்  தூளாக்கப்பட்ட கஞ்சா பக்கட்டுக்களுடன்ரபதுளைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவ்விருவரும் பதுளை நீதவான் நீதிபதி நயந்த சமரதுங்க முன்னிலையில் இன்று ஆஜர் செய்யப்பட்டனர். இந்நிலையில் குறித்த  மாணவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சம்பிக்க ஜயவர்தன நீதிபதியிடம் ஆஜர் செய்யப்பட்ட இருவரும் பதுளை பிரதான பாடசாலையொன்றில் க.பொ.த. உயர்தர வகுப்பில் கல்வி கற்று வருகின்றனர்.

ஆகையினால் இவர்கள் விடயத்தில் கருணை காட்டுமாறு கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து நீதிபதி அம்மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையின் அதிபரிடம் “மாணவர்கள்” என்று உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்துடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் படி உத்தரவிட்டார்.

அத்துடன் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரை விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி அன்றைய தினம் உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் பணித்தார்.

குறிப்பிட்ட இரு மாணவர்களும் மோட்டார் சைக்கிளொன்றில் பயணித்துக்கொண்டிருந்த போது பதுளைப் பொலிஸார் குறிப்பிட்ட மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட வேளையில் இருவரிடமும்  ஆயிரம் மில்லி கிராம் என்ற வகையில் இரண்டாயிரம் மில்லி கிராம் தூளாக்கப்பட்ட கஞ்சா பக்கட்டுக்களை மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment