கூடலூரில் கடைக்குள் புகுந்த 6 அடி நீள நாகப்பாம்பு பிடிபட்டது

273 0

கூடலூரில் கடைக்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.

கூடலூர் பகுதியில் மழைக்காலம் முடிந்து பகலில் வெயிலும், இரவில் பனிப்பொழிவும் இருந்து வருகிறது. இதனால் விஷ பாம்புகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. வீடுகள், கடைகளுக்குள் புகுந்து வரும் பாம்புகளை தீயணைப்பு துறையினர் பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கூடலூர் காளம்புழா பகுதியில் உள்ள ஒரு கடையில் பாம்பு புகுந்துவிட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர்(பொறுப்பு) அனில்குமார் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கடைக்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பை பிடித்து, அடர்ந்த வனத்தில் விட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Leave a comment