காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்

240 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் தமது பிள்ளைகளை தேடி கடந்த வருடம் மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 643 ஆவது நாளாகவும் முல்லைத்தீவில் தொடர்கிறது.

சர்வதேச மனித உரிமைகள் நாளான இன்று 10.12.18 அன்று வடக்கில் உள்ள ஜந்து மாவட்டத்தினை சேர்ந்த வலிந்து காhணாமல் ஆக்கப்பட்டவர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டுவரும் வேளையில் சர்வதேச மனித உரிமைகள் நாளான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒன்று திரண்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

முல்லைத்தீவு நகரில் உள்ள இராயப்பர் தேவாயலத்தின் முன்றலில் இருந்து ஆரம்பமான இந்த பேரணி முல்லைத்தீவு மாவட்டச்செயலகம் முன் சென்றடைந்துள்ளது.

இதன்போது வேண்டும்வேண்டும் நீதிவேண்டும்,சர்வதேசமே பதில்கூறு,சிறைகளில் வாடும் எமது உறவுகளுக்கு நீதிவேண்டும்,சர்வதேசமே திரும்பிப்பார், ஆட்சிக்கு அடிபடும் அரசு எமக்கு என்ன பதில்கூறும், என்ற வசாகங்கள் எழுதிய பாதாகைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பிய காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஜக்கியநாடுகள் சபையின் அலுவலகத்திற்கான வேண்டு ஒன்றினை விடுத்துள்ளார்கள்.

இந்த வேண்டுகேளினை முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்வர்களின் சங்க தலைவி ம.ஈஸ்வரி அவர்கள் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி கலாராஞ்சினி அவர்களிடம் கையளித்துள்ளார்கள் அவர்கள் ஜ.நா அலுவலகத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a comment