பதவியை எதிர்பார்த்து அரசியல் செய்வதில்லை-மஹிந்த

353 0

தற்போதைய அரசியலில் ஒருவகை குழப்ப நிலை உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். அந்த குழப்ப நிலையை சரி செய்வதற்கு மக்கள் எதிர்பார்ப்பது பொதுத் தேர்தலையே என்று அவர் கூறியுள்ளார்.

இன்று பன்னிபிட்டிய, ருக்மல் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதன் பின்னர் கோட்டே ஶ்ரீ கல்யாணி சாமஶ்ரீ தர்ம சபையின் இத்தேபானே தம்மாலங்கார தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ, அங்கு வைத்து ஊடகங்களிடம் பேசும் போது,

பதவிகளை எதிர்பார்த்துக் கொண்டு அரசியலில் ஈடுபடுவதில்லை என்றும், பதவி இல்லாமலும் தான் அரசியல் செய்ததாகவும் கூறினார்.

Leave a comment