கொமன் வெல்த் வரலாற்றிலேயே முதல் முறையாக பிரதமருக்கு நீதிமன்றம் இடைக்கால தடை-சுமந்திரன்

259 0

“கொமன் வெல்த் வரலாற்றில் முதல் முறையாக பிரதமர் ஒருவர் செயற்படுவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது” என சட்டத்தரணியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மேன் முறையீட்டு நீதி மன்றம் புதிய பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு இடைக்கால தடையத்தரவை நேற்று பிறப்பித்தது. இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் மேற்கண்டவாற கருத்து வெளியிட்டார்.

தொடர்ந்து இது குறித்து கருத்து வெளியிட்ட சுமந்திரன்,

“ ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள பிரதமருக்கெதிராக இரண்டு தடவைகள் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதைத் இனிமேலாவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டு பாராளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சி முன்மொழியும் உறுப்பினரை பிரதமராக நியமிக்க வேண்டும். இது அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள கடமையும் அதிகாரமுமாகும்.

கொமன் வெல்த் வரலாற்றை பின்பற்றி ஜனாதிபதி அதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்,” எனவும் தெரிவித்தார்.

Leave a comment